கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கலுங்கடி பகுதியில் நேற்று காலையில் இரண்டு மரநாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தூய்மை பணியாளர்கள் மரநாய் உடல்களை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்றனர். வனத்துறையினர் விரைந்து வந்து உடல்களை மீட்டனர். உடற்கூறு ஆய்வில், தெருநாய்கள் கடித்து மரநாய்கள் இறந்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.