குமரி மாவட்டத்திற்கு 400 டன் உரங்கள் வருகை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையைத் தொடர்ந்து விவசாயிகள் விவசாயப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக நெல் பயிரிடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நேற்று 400 டன் யூரியா உள்ளிட்ட உரங்கள் லாரிகள் மூலம் மாவட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. இந்த உரங்கள் விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி