நாகர்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 டன் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் இளநிலை பரிசோதனை ஆய்வாளர் ரமேஷ், உதவி இளநிலை ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோரை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், நேற்று காவலாளி பாபுவும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.