குமரிக்கு வந்த 2,500 டன் ரேஷன் அரிசி

ஆந்திர மாநிலத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 2,500 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அரிசி சரக்கு ரெயில் வேகன்கள் மூலமாக கொண்டு வரப்பட்டன. மொத்தம் 42 வேகன்களில் வந்த அரிசி மூடைகள் நேற்று நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அந்த வேகன்களிலிருந்து லாரிகளில் மூடைகள் ஏற்றப்பட்டு கோணத்தில் உள்ள உணவுக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கிவைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி