கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியில் இன்று (அக்.,3) மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திமுருகன் (அகஸ்தீஸ்வரம்). ரவி (குளச்சல்) ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் 3 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப் பட்டதுடன் 2 உணவகங்களுக்கு மொத்தம் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது.