கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகம் திட்டத்திற்காக வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ரேஷன் அரிசி நாகர்கோவிலுக்கு வருகிறது. நேற்று திருவாரூரில் இருந்து 1300 டன் அரிசி சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. அவை அங்கிருந்து லாரிகள் மூலம் உணவுப்பொருள் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டது.