நாகர்கோவில்: 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் உள்ள கடையில் மாநகர சுகாதார அலுவலர் ஆல்பர் மதியரசு தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று (மார்ச் 22)  திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 100 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதைத்தொடர்ந்து ரூ 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி