நாகர்கோவில்: ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா பறிமுதல்

மும்பையில் இருந்து நாகர்கோவில் வரும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்துவதாக மதுவிலக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. உடனே போலீசார் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்திற்கு சென்றனர். ரயில் வந்ததும் அதன் பெட்டிகளில் மதுவிலக்கு மற்றும் ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். 

ஆனால் கஞ்சா எதுவும் கிடைக்கவில்லை. அப்போது ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடையில் ஒரு பை கேட்பார்ற்று கிடந்தது. போலீசார் அதனை கைப்பற்றி சோதனையிட்ட போது, அதில் ½கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

விசாரணையில் யாரோ மர்ம நபர் கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்து, போலீசாரை கண்டதும் நடைமேடையில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அதை கடத்தி வந்த நபரை தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி