பிளாஸ்டிக், உணவு கழிவுகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதற்கிடையே சமீபகாலமாக இந்த பகுதியில் மாமிச கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படும் சம்பவம் நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தெரு நாய்களும் அதிக அளவில் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை பேரூராட்சி செயலாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. கலெக்டர் உத்தரவிட்டும் கண்டுகொள்ளவில்லை. எனவே அந்த பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றுவதில் உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.