நேற்று அஷ்டாபிஷேகம், உச்சகால பூஜை, அன்னதானம், அலங்கார தீபாராதனை, வாஸ்து பலி ஆகியன நடந்தன. நாளை (ஜூன் 7) காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு உஷ பூஜை, காலை 6.30 மணிக்கு அபிஷேகம், காலை 6.45 மணிக்கு 12 ஜோதிர்லிங்க புனித நீரை நிரப்பிய பிரம்ம கலசம் சிவலிங்கத்திற்கு அபிஷேகம், காலை 7.15 மணிக்கு கைலாய வாத்தியம் முழங்க, பஞ்சாரி மேளம் ஒலிக்க 12 ஜோதிர்லிங்க கலசங்கள் எழுந்தருளி கோவிலை வலம் வருதல், காலை 7.30 மணியிலிருந்து 8.30க்குள் 12 ஜோதிர்லிங்க புனித நீரும் தனித்தனியாக கும்ப கலசத்தின் மீது மகா கும்பாபிஷேகம் நடத்துதல் ஆகியன நடைபெறுகின்றன. கும்பாபிஷேக ஏற்பாடுகளை பக்தர்கள் செய்துள்ளனர்.
கனடாவில் இந்திய வம்சாவளியினர் 17 பேர் கைது