இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிக அளவில் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் மாவட்டத்தில் மழை குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதை அறிந்ததும் விடுமுறை நாளான இன்று திற்பரப்பு வந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு