அப்போது அங்கு வந்த விஸ்வம் மற்றும் அவரது மகன் பிரபாகரன் ஆகியோர் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொண்டிருந்த தொழிலாளர் சேவியர், வினு ஆகிய இரண்டு பேரை அறிவாளால் வெட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் குலசேகரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விஸ்வம், பிரபாகரனை கைது செய்தனர்.
இந்த வழக்கு பத்மநாதபுரம் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று கோர்ட் நீதிபதி பிரவீன் ஜீவா விஸ்வத்தை குற்றவாளி என அறிவித்து அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். மகன் பிரபாகரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்தார்.