தக்கலை: பல் பொருள் அங்காடியில் திருட்டு - சிசிடிவி வைரல்

தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி என்ற பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் தக்கலைப் பகுதியில் பல்பொருள் அங்காடி கடை நடத்தி வருகிறார். சம்பவதினம் அவரது கடையில் உள்ள விலை உயர்ந்த பொருள்கள் திருட்டுப் போனது. இது தொடர்பாக அவர் கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.

அப்போது டிப்டாப் உடையில் கடையில் பொருட்கள் வாங்குவது போல் வந்த இரண்டு பெண்கள் சுமார் பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை திருடி சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து இது குறித்து சிசிடிவி கட்சியுடன் தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தக்கலை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, திருடியது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் என தெரியவந்தது.

தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (பிப்.28) நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராதா, சவுந்தரமணி ஆகிய இரண்டு பெண்களை தக்கலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து  நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் சம்மந்தபட்ட பெண்கள் கடையில் திருடிய சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி