இந்த நிலையில் முகமது ராசிக் மற்றும் இருவர் சேர்ந்து பிரதீப் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த ஆட்டோ, மோட்டார் பைக் ஆகியவற்றை சேதப்படுத்தி மிரட்டல் கொடுத்ததாக பிரதீப் தக்கலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே முகமது ராசிக் தக்கலை போலீசில் பிரதீப் மற்றும் இருவர் சேர்ந்து காரில் கடத்திச் சென்று தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார். இதன் பேரில் மூன்று பேர் மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே இந்த வழக்குடன் தொடர்புடைய ஒருவரை கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில் போலீஸ் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் முகமது ராசிக் அளித்த புகார் என்பதில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.