முட்டம் ஆரோக்கியமாதா தெருவைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி ஜெயன் பாபுவின் மனைவி ரெகோபியா (31) காணாமல் போனதாக வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாத ரெகோபியா, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. ஜெயன் பாபு கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.