மறுநாள் காலை மேரி சுகந்தி வேலைக்கு செல்லும் போது, சகாயதர்ஷினி முதலில் செல்வதாக கூறிவிட்டு சென்றாராம். பின்னர் மேரி சுகந்தியும் வேலைக்கு சென்றுள்ளார்.நண்பகலாகியும் சகாயதர்ஷினி வேலைக்கு போகவில்லை. இதனால் தாய் மேரி சுகந்தி மகளை பல்வேறு இடங்களில் தேடி சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட போது, சகாயதர்ஷினி மதுரை விமானம் மூலம் ஊருக்கு திரும்பியதாக தகவல் கிடைத்தது.
உடனே மேரி சுகந்தியும் விமான மூலம் ஊருக்கு திரும்பி வந்தார். ஊரில் அம்மா மற்றும் உறவினர்கள் வீடுகள் என பல இடங்களில் தேடியும் சகாய தர்ஷினி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து பதற்றம் அடைந்த மேரி சுகந்தி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.