கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காப்பிகாடு பகுதியில் தரமற்ற முறையில் சாலைப் பணிகள் நடந்ததாகவும், அதனைத் தட்டிக்கேட்ட சந்திரமோகன் என்பவரை சுரேஷ்குமார் உட்பட 3 பேர் சேர்ந்து சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சந்திரமோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுரேஷ்குமார் மீது மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து அடிதடி வழக்குகளில் ஈடுபட்டு வருவதாகப் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.