தங்கை சொன்ன அட்வைஸ்: ஆத்திரத்தில் அக்கா விபரீத முடிவு

வெள்ளிச்சந்தை அருகே ஆழிக்கால் பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி மகள் சகாய விபிகா (19). பிளஸ் டூ படித்துவிட்டு பிஎஸ்சி நர்சிங் படிக்க ஆசைப்பட்டுள்ளார். இதற்காக திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரி சென்று சேர்க்கை குறித்து சென்று விசாரித்து விட்டு வந்துள்ளனர்.
     
இந்த நிலையில் நேற்று முன்தினம் (செப்.,20) ஆன்லைனில் நர்சிங் படிப்பதற்கு கல்லூரி தேர்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் தங்கை தனியார் கல்லூரியில் அதிக கட்டணம் ஆகும். எனவே அரசு கல்லூரி தேர்வு செய்ய என்று கூறியுள்ளார்.

இதனால் கோபித்து கொண்டு அறைக்குள் சென்று கதவு அடைத்த அவர் பின்னர் கதவை திறக்கவில்லை. ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது சகாய விபிகா  மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனி ஒரு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சகாய விபிகா ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இது குறித்த புகாரி பேரில் வெள்ளிசந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி