முட்டம்: விழுதுகள் மறுவாழ்வு சேவை மையம் கலெக்டர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், முட்டம் பகுதியில் ரூ. 14.5 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட விழுதுகள் - ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று (10 ஆம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சேவை மையங்கள் பிப்ரவரி 2026 முதல் செயல்பாட்டிற்கு வரவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி