நேற்று முன்தினம் (பிப்.24) இரவு சுமார் 7 மணி அளவில் அனிஷ் வழக்கம்போல் மது அருந்திவிட்டு பாபு வீட்டு முன் நின்றுகொண்டு அவதூறாகப் பேசி தகராறு செய்தார். இதனைப் பாபு தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அனிஷ் திடீரென பாபுவின் அந்தரங்கப் பகுதியில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பாபு கதறினார். உடனே அவரை மீட்டுக் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அனிஷ் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்