முளகுமூடு பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நன்றி அறிவிப்பு பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
செறுகோல் ஊராட்சியில் நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் செய்த போது 100 நாள் வேலை செய்யும் பெண்கள் விஜய்வசந்த் எம்.பியிடம் 3 மாதமாக தங்களுக்கு சம்பளம் வரவில்லை என தெரிவித்தனர். அவர்களிடம் சம்பளம் வர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.