மார்த்தாண்டம்: லாரி மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக் கடைப் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (36). தொழிலாளி. இவர் நேற்று இரவு பைக்கில் ஆற்றூரிலிருந்து உண்ணாமலைக் கடைப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். 

அப்போது பயணம் என்ற பகுதியில் வந்தபோது முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அஜித்குமாரை அக்கம்பக்கத்தினர் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அங்கு சிகிச்சைப் பலனின்றி அஜித்குமார் இன்று 1-ம் தேதி காலை 11 மணியளவில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி