அப்போது திடீரென பிரியாணி சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி பெற்றனர். தொடர்ந்து 15 பேர் குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், இரண்டு பேர் நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நாகர்கோவில் மற்றும் குளச்சல் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் ஆஸ்பத்திரிகளில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் பிரியாணி சாப்பிட்ட ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அவர்களின் விசாரணைக்கு பிறகு பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கத்துக்கு காரணம் தெரிய வரும்.