இந்நிலையில் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை எனவும் அதனை உடனடியாக சீரமைத்து கொடுக்க வேண்டும் எனவும் குழித்துறை நகர இந்து முன்னணி சார்பில் குழித்துறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு , குழித்துறை நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கும் போராட்டம் இன்று 17-ம் தேதி நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு நகரத் தலைவர் வினு குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விமல் ராஜ் முன்னிலை வகித்தார். மேலும் போராட்டத்தில் குழித்துறை நகர பாஜக தலைவர் சுமன், மாவட்ட கவுன்சிலர் ராஜேஷ் பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.