குமரி மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழாவிற்காக, பக்தர்கள் ஆண்டுதோறும் கடும் விரதமிருந்து அலகு குத்தி, பறக்கும் காவடி, தொட்டில் காவடி போன்ற பல்வேறு காவடிகளுடன் பாதயாத்திரையாகச் செல்கின்றனர். இரணியல், மணவாளக்குறிச்சி, புதுக்கடை மற்றும் குளச்சல் பகுதிகளிலிருந்து இக்காவடி ஊர்வலங்கள், சுப்பிரமணிய சுவாமி கோவிலை நோக்கி முக்கிய சாலைகள் வழியாகச் செல்கின்றன. இன்று மாலையில் பக்தர்களின் காவடி ஊர்வலம் துவங்கியது. இதனால், வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.