கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் திங்கள்சந்தை பகுதிகளில் இருந்து நேற்று (பிப்ரவரி 21) மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காவடி ஊர்வலத்தில் சென்ற பக்தர்களுக்கு, த.வெ.க. கட்சியினர் கட்சி கொடியைக் கொடுத்து விளம்பரம் செய்தது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பறக்கும் காவடி எடுத்த முருக பக்தர்களுக்கு கட்சி கொடி வழங்கப்பட்டதால், பக்தர்கள் முகம் சுளித்தனர்.