குமரி: கர்நாடக துறைமுகத்தில் குமரி மீனவர் மாயம்

கர்நாடகாவின் மால்பி துறைமுகத்திற்கு மீன்பிடிக்க சென்ற தேங்காப்பட்டணம் அருகே சின்னதுறையை சேர்ந்த கிளீட்டஸ் (56) என்பவர், கடந்த 22-ம் தேதி இரவு படகிலிருந்து கடலில் தவறி விழுந்து மாயமானார். விசைப்படகு பழுதானதால் துறைமுகத்தில் கரை ஒதுக்கி பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. மீனவர்கள் அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து குளச்சல் கடலோர காவல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி