கன்னியாகுமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 15 லட்சத்து 10,550 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 7,51,016 ஆண் வாக்காளர்கள், 7,59,390 பெண் வாக்காளர்கள் மற்றும் 144 இதர பிரிவினர் உள்ளனர். சிறப்புத் திருத்தத்திற்குப் பிறகு 78,615 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் மற்றும் முகவரி மாற்றம் காரணமாக 7,564 பேர் நீக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.