குமரி: தமிழக முதல்வர் வரும் நாளில் விவசாயிகள் உண்ணாவிரதம்

குமரி மாவட்டத்தில் 4வழிப்பாதை மற்றும் ரயில்வே 2வழிப்பாதை பணிகளுக்காக ஏராளமான நீர்நிலைகள் அழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வரும் 25-ம் தேதி தமிழக முதல்வர் குமரிக்கு வரும்போது, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என பாசனத்துறை சேர்மன் வின்ஸ்ஆன்றோ மற்றும் சஹகர்பாரதி தலைவர் சகாயம் ஆகியோர் தலைமையில் இன்று (20-ம் தேதி) நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி