குலசேகரம்: நகை மாயம் ; 3 பேர் தற்கொலை முயற்சி - வழக்கு

திற்பரப்பு அருகே வசிக்கும் 72 வயது முதியவர் ஒருவர், தனது வீட்டில் இருந்த 46 கிராம் தங்க நகைகள் மே 28, 2026 அன்று காணாமல் போனதாக குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் முதியவரின் மூன்றாவது மகனை விசாரணைக்கு அழைத்தனர். இதனால் மனமுடைந்த முதியவரின் மகன், மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் நேற்று விஷம் குடித்துவிட்டு காவல் நிலையம் வந்தனர். மூவரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தந்தை சந்தேகப்பட்டு புகார் அளித்ததால் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி