குளச்சல்: வேலை பிடிக்காததால் வாலிபர் தற்கொலை

பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த அனில்குமார் (29) என்பவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். வேலை பிடிக்காததால் சொந்த ஊர் திரும்பி அண்ணனுடன் நில அளவைப் பணியில் ஈடுபட்டார். திடீரென வேலைக்குச் செல்லாததால் தந்தை கண்டித்ததால், அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி