குளச்சல், பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 51 வயதான கூலித் தொழிலாளி டென்னிஸ், செவ்வாய் பிற்பகல் தோட்டத்தில் உள்ள புளியமரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். குடும்பத்தினர் அவரை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி டென்னிஸ் புதன் காலை உயிரிழந்தார். இதுகுறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.