குளச்சல், பூலவிளை பகுதியைச் சேர்ந்த 39 வயது கட்டிடத் தொழிலாளி மணிகண்டன், திருமணம் ஆகாததால் விரக்தியில் இருந்து வந்துள்ளார். அவரது தம்பிக்கு திருமணம் முடிந்த நிலையில், தனக்கு திருமணம் ஆகாதது மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இன்று காலை, மணிகண்டன் தனது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குளச்சல் போலீசார் அவரது உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.