குளச்சல்: வங்கிக்கு சென்ற 3 குழந்தைகளின் தாய் மாயம்

கொட்டில்பாடு பகுதியைச் சேர்ந்த ஆண்டனி என்பவரின் மனைவி மினி சிடா (36), ரூ. 2 லட்சம் பணத்துடன் அடகு வைத்திருந்த நகையை மீட்கச் செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் அணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கணவர் ஆண்டனி குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்துடன் மாயமான மினி சிடாவைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி