குளச்சல் பணிமனையில் அரசு பஸ் கண்டக்டர் பிஜிலிகர் (44), நேற்று இரவு தடம் எண் 88 பி/சி பஸ்ஸில் பணியில் இருந்தபோது, குறும்பனையைச் சேர்ந்த ஒருவர் போதையில் பஸ்ஸில் ஏறி டிக்கெட் எடுக்க மறுத்து, கண்டக்டரின் சட்டையைப் பிடித்து தகராறு செய்து கீழே தள்ளினார். இதில் கண்டக்டர் பிஜிலிகர் படுகாயமடைந்து குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.