குளச்சல்: காதல் திருமணம்.. 5 மாதத்தில் பெண் தற்கொலை முயற்சி

மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியை சேர்ந்த கிறிஸ்பின் (22) என்பவரை சந்தியா (19) காதலித்து கடந்த 25. 7. 2025 அன்று திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, கணவர் கிறிஸ்பின் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தியாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்தியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மகளிர் போலீசார் கணவர் கிறிஸ்பின் மற்றும் மேலும் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி