கேரளா மாநிலத்தை சார்ந்த இரண்டு அருட்சகோதரிகள் சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜூலை மாதம் 25ஆம் தேதி மதமாற்றம் செய்ததாக கைதாகி சிறையில் உள்ளனர். அருள் சகோதரிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி கடல் மக்களின் கண்டனக் குரல் போராட்டம் குளச்சல் கடல் பகுதியில் இன்று 1-ம் தேதி நடத்தப்பட்டது. தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமை வகித்தார். குளச்சல் விசைப்படகு உரிமையாளர் - தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரக்சன் உட்பட நிர்வாகிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.