குளச்சல்: வீட்டை உடைத்து சேதம்; 4 பேர் மீது வழக்கு

குளச்சல் அருகே உடையார் விளையைச் சேர்ந்தவர் ராஜமணிமகன் ஜவஹர்லால் (34) கொத்தனார் வேலை பார்க்கிறார். இவருக்கும் அவரது அண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று (ஏப்ரல் 15) மாலை ஜவஹர்லால் அண்ணன் மனைவியிடம் வாய்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் மனைவி கன்னியாகுமரியில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

உடனே அங்கிருந்து நான்கு பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் உடையார் விளைக்கு வந்துள்ளனர். பின்னர் வீட்டுக் காம்பவுண்டுக்குள் அத்துமீறி புகுந்து ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து ஜவஹர்லாலுக்கு கொலை மிரட்டல் கொடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜவஹர்லால் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கும்பலைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி