குளச்சல்: பைக் மீது உரசி தகராறு; கொலை மிரட்டல்

குளச்சல் அருகே குறும்பனை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் பிரபு (44). இவர் சம்பவ தினம் உறவினர் கின்டோ ஜெரின் என்பவர் பைக்கில் கோடி முனையில் நடந்த திருமண விழாவுக்கு சென்றுள்ளார். விழா முடிந்து ஜெரின் பைக் எடுத்த போது, ஆலன் பேரோ என்பவருடைய பைக் மீது உரசியது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆலன் பேரோ என்பவர் கின்டோ ஜெரினை தாக்கியுள்ளார். 

இந்த நிலையில் ஜோஸ் பிரபு கோடி முனை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கு வந்த ஆலன் பேரோ, ஜெகன், தாமஸ், சசி மற்றும் ஜோஸ் ஆகியோர் சேர்ந்து ஆயுதங்களால் ஜோஸ் பிரபுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ஜோஸ் பிரபு அளித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி