குளச்சல்: காணிக்கை அன்னை ஆலயத்தில் மெழுகுவர்த்தி பவனி

குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலய 425வது ஜுபிலி ஆண்டு பங்குகுடும்ப விழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் விழா நடக்கிறது. மூன்றாம் நாளான நேற்று 2ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியான புனித காணிக்கை அன்னையின் சிற்பப்பவனியுடன் மெழுகுவர்த்தி பவனி நடந்தது. 

இதனை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து, புனித காணிக்கை அன்னையின் சிற்ப மெழுகுவர்த்தி பவனி புறப்பட்டுச் சென்றது. பவனிக்கு வழிநெடுக பொதுமக்கள் வரவேற்பளித்தனர். பவனியானது காமராஜர் பஸ் நிலையம், காந்தி சந்திப்பு, பீச் சந்திப்பு வழியாக காணிக்கை அன்னை ஆலயம் சென்றடைந்தது. அங்கு இரவு 10 மணிக்கு சிறப்புத் திருவிழா திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இன்று திங்கட்கிழமை காலை திருப்பலி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி