குளச்சல் அருகே வேகத்தடையில் பைக் நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த மீனவர் சகாய தினேஷ் (29) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று இரவு மருந்து வாங்கச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது. நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சகாய தினேஷ், விஜய் ரசிகராகவும், சட்டமன்ற தேர்தலில் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டவராகவும் அறியப்படுகிறார். இவருக்கு மனைவியும், 4 வயது மகளும் உள்ளனர்.