இனிவரும் பருவமழை காலங்களில் இப்பகுதியில் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு சுவர், ஆற்றின் கரைப்பகுதிகள் வலுவாக உள்ளதா என கலெக்டர் அழகு மீனா பார்வையிட்டார்.
மேலும் மங்காடு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் வெள்ளத்தில் மூழ்கி அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இனிவரும் பருவமழையின் போது இப்பகுதியில் அதிகளவு பாதிப்புகள் ஏற்படாது இருக்க ஆற்றின் கரைப்பகுதிகளில் புதர்களை அகற்றி, கரையினை பலப்படுத்திடவும், வெள்ளத்தின் அளவினை அவ்வப்போது கண்காணித்து, வெள்ளம் ஊருக்குள் புகாத வண்ணம் தற்காத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.