இந்த அலுவலகத்தின் முன்பக்க சுவரில் பெரியாரின் படம், அவருடைய கருத்துரைகளின் முக்கிய வாசகங்கள் பெயின்ட்டால் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை ஜெயக்குமார் அங்கு வந்தபோது அலுவலகத்தின் சுவரில் இருந்த பெரியார் படத்தில் அவரது கண், வாய்ப்பகுதிகளில் பெயின்ட் சுரண்டி எடுக்கப்பட்டிருந்தது.
மேலும் சுவரில் எழுதப்பட்டிருந்த பெரியாரின் முக்கிய வாசகங்கள் சில எழுத்துக்கள் அழிக்கப்பட்டிருப்பதைக் கண்டார். இதுகுறித்து ஜெயக்குமார் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.