கருங்கல் அருகே உள்ள கருக்குபனை பகுதியில் லாரி நிலைதடுமாறி சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் மோதியது. லாரி டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் ஒரு ஆட்டோவில் லாரியைத் துரத்தி 8 கிலோமீட்டர் தூரம் பிடித்து, கருங்கல் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரி டிரைவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக-அதிமுக கூட்டணி.. அவர்களிடம் தான் கேட்க வேண்டும்: இபிஎஸ்