இரணியல் அருகே பாறைக்காவிளையைச் சேர்ந்த ரெதீஸ் (33) என்பவர் நாகர்கோவிலில் இருந்து சுங்கான்கடை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த கேரள கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரெதீஸ் சுங்கான்கடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.