இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து மினி டெம்போவில் திங்கள் நகர் வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். பூச்சாஸ்தான் விளை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மினி டெம்போ மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த விக்னேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.