இரணியல்: விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழப்பு ‎

மேலகட்டிமாங்கோடு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (22) என்பவர், ஆன்லைன் மூலம் பைக் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 11 ஆம் தேதி பேயன்குழி சாலையில் மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை ஆனந்த் உயிரிழந்தார். இது தொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி