இரணியல்: எரிந்த நிலையில் இளம் பெண் எலும்புக்கூடு மீட்பு

சுங்கான்கடை ஒதுக்குப்புற பகுதியில் மனித எலும்பு கூடு எரிந்த நிலையில் கிடப்பதாக நேற்று (பிப்ரவரி 12) நள்ளிரவில் இரணியல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடல் முழுவதும் மெல்லிய கம்பியால் சுற்றி கட்டப்பட்டு எரித்து இருந்ததைக் கண்டனர். இது ஒரு இளம் பெண்ணின் உடல் என தெரிய வந்துள்ளது. போலீசார் எலும்புகளை குமரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி