இரணியல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோட்டியோடு பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் போலிசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சையா என்பவரது மகன் இசக்கிராஜ் (53) என்பவர் ஓட்டி வந்த காரைச் சோதனை செய்ததில் விற்பனை செய்ய வைத்திருந்த 30 கிலோ எடையுள்ள அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்து NARCOTIC DRUGS AND PSYCHOTROPIC SUBSTANCES ACT, 1985-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குற்றவாளி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா மேற்படி கஞ்சா குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். உத்தரவின்படி கஞ்சா குற்றவாளி இசக்கிராஜ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.