ஆர்ப்பாட்டத்தில் பேசிய பிரின்ஸ் எம்.எல்.ஏ: - இரணியல் பகுதியில் சாலை விரிவுபடுத்தக் கூடாது என ஒரு கூட்டம் தடை உத்தரவு வாங்கியிருக்கிறார்கள். அந்த தடையை விலக்க நீதிமன்றத்தை நாடினால் மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது சட்டசபையில் இது தொடர்பாக பேசி தமிழக முதல்வர் உடனடியாக இந்த சாலையை சீரமைப்பு பணி தொடங்குவதாக அறிவித்துள்ளார். தற்போது இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
எனவே உடனடியாக 25 நாட்களில் சாலை சீரமைப்பு பணி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ்காரர் கலந்து கொண்டனர்.